தஞ்சை மாவட்டம்,சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சி மல்லிப்பட்டினம் துறைமுகம் இருள் சூழ்ந்து காணப்படுகிறது.தஞ்சை மாவட்டத்திலே மிகப்பெரிய துறைமுகம் மல்லிப்பட்டினத்தில் அமைந்துள்ளது.
இதனை பார்வையிட தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் துறைமுகத்திற்கு வந்து செல்கின்றனர்,மல்லிப்பட்டிணம் துறைமுகம் முழுவதும் முறையான பராமரிப்பு இன்றி அசுத்தமாகவே காணப்படுகிறது.மேலும் பண்டிகை நாட்களில் அதிகமான பொதுமக்கள் மல்லிப்பட்டினம் துறைமுகம் நோக்கி படையெடுத்து வருகின்றனர்.
சுற்றி பார்க்க வருபவர்களுக்கு முறையான அடிப்படை வசதிகள் இன்றி காணப்படுகிறது,மேலும் இரவு நேரங்களில் துறைமுகம் முழுவதும் உள்ள உயர் கோபுர மின்விளக்கு உட்பட எந்தவொரு விளக்குகளும் எரிவதில்லை,இதனால் இரவு நேரங்களில் துறைமுகத்தில் எந்தவித அசம்பாவித நிகழ்வுகள் நடந்தாலும் கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு இருள் சூழ்ந்து காணப்படுகிறது.இரவு நேரங்களில் மது பிரியர்களின் கூடாரமாகவும் இருக்கிறது,மது அருந்திவிட்டு மது பாட்டில்களை துறைமுகத்திலே உடைத்துவிட்டு செல்கின்றனர்.
மல்லிப்பட்டினம் துறைமுக நுழைவுக்கட்டணங்களும் வசூலிக்கப்பட்டு வருகிறது ஆனால் எந்தவித அடிப்படை தேவைகளும் செய்திடாமல் வசூலிப்பது சுற்றுலா வரக்கூடிய சுற்றுலாவாசிகளுக்கு முகம் சுளிக்க வைக்கிறது.ஆகவே இதனை உடனடியாக துறைமுக கமிட்டிக்கள்,அரசு அதிகாரிகள் உரிய கவனம் செலுத்திட வேண்டும் என பொதுமக்கள் கேட்டுக் கொண்டனர்.



Post a Comment