மல்லிப்பட்டினத்தில் பெண்களுக்கான கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி.!

 


Mallipattinam Educational Nexus நடத்தும் பெண்களுக்கான கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்ஷா அல்லாஹ்  இன்று(26.4.2024- வெள்ளிக்கிழமை) மாலை 4.00 மணி அளவில் நமதூர் பெண்கள் மதரசாவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

இந்நிகழ்விற்கு சிறப்பு விருந்தினர்களாக

 அம்மாப்பட்டினம் அன்னை கதீஜா அகாடமியின் தாளாளர் Prof.S. நஜ்மா ஆலிமா M.A, M.Sc (psychology)


அதிராம்பட்டினம் ஷிஃபா மருத்துவமனையில் இருந்து கலை M.Sc Zoology, ராஜி G.N.M  மற்றும் கேத்தரின் மெட்ரிக் உயர்நிலை பள்ளி ஆசிரியர் M.ஃபரீன் மைதின் M.A.,B.Ed ஆகியோர் வருகை தந்து பெண் கல்வியின் அவசியம் குறித்தும், Para medical courses என்றழைக்கப்படும் துணை மருத்துவ படிப்புகள் குறித்தும் சிறப்புரையாற்ற இருக்கிறார்கள். 

அதனை தொடர்ந்து, நமது ஊரில் கல்வி பயின்று கடந்த 2022- 2023 ஆம் கல்வி ஆண்டில் 

பத்தாம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களில் தேர்ச்சி பெற்ற மாணவிகளுக்கு பரிசளிக்கும் நிகழ்வும் நடைபெறவிருக்கிறது. 

அதுசமயம் நமது ஊர் பெண்களும் மாணவிகளும் தவறாது கலந்து கொண்டு  சிறப்பிக்குமாறு அழைப்பது 

Mallipattinam Educational Nexus.

Post a Comment

Previous Post Next Post