தஞ்சை மாவட்டம்,மல்லிப்பட்டினம் தீனியாத் மக்தப் மதரஸாவின் எட்டாம் ஆண்டு விழா நிகழ்ச்சி கடந்த சனி,ஞாயிறு(மே.11,12) ஆகிய இரு தினங்களாக ஜூம்ஆ பள்ளியில் மக்தப் மதரஸாவில் பயிலும் மாணாக்கர்களுக்கு போட்டிகள் நடைபெற்று பரிசுகள் வழங்கப்பட்டன.
சமுதாய நலமன்ற தலைவர் சகாப்தீன் வரவேற்புரை நிகழ்த்தினார்.மல்லிப்பட்டினம் ஜமாஅத் தலைவர் அல்லாப்பிச்சை தலைமை வகித்தார்.ஜமாஅத் நிர்வாகிகள் மற்றும் மன்ற நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்வில் பாங்கு போட்டி,கிராஅத் மனன போட்டி,பேச்சுப்போட்டி ஆகிய போட்டிகளில் முதல் இடங்களை பெற்ற மாணவர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கி ஊக்குவித்தனர்.போட்டியில் கலந்துக்கொண்ட அனைத்து மாணவ,மாணிவிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.இறுதியாக சமுதாய நலமன்ற பொருளாளர் இப்ராகீம் நன்றியுரை ஆற்றினார்.
மக்தப் மதராஷாவில் பயிலும் மாணவ,மாணவிகள் கடுமையான பயிற்சியும்,சரியான ஊக்குவிப்பும் நடந்திருப்பது அவர்களின் பேச்சிலே தெரிந்தது. அந்தளவிற்கு மாணவ,மாணவியர்களை மக்தப் இமாம்கள் அனைவரும் உருவாக்கி இருக்கிறார்கள்.அவர்களின் பணி சிறப்பு வாய்ந்தது.














Post a Comment