பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் அசோக்குமாருடன் மல்லிப்பட்டினம் மமக நிர்வாகிகள் சந்திப்பு.!

 


பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் அசோக்குமார் அவர்களுடன் மல்லிப்பட்டினம் மமக நிர்வாகிகள் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

சரபேந்திரராஜன்பட்டினம் ஊராட்சி,மல்லிப்பட்டினத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரேசன் அட்டைகள் உள்ளன.ஒரே ரேசன் கடை மட்டுமே இயங்கி வருகிறது.இதனால் காத்திருந்து பொருட்கள் வாங்கவேண்டிய சூழல் இருந்து வருகிறது, பொருட்களும் பல நேரங்களில் முடிந்து விடுகிறது.ஆகையால் தனி ரேசன் கடை அமைத்து தர வேண்டியும், ஊர் நலன் சார்ந்த பல்வேறு கோரிக்கைகளையும் பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் அசோக்குமார் அவர்களிடம் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.மேலும் மமக மல்லிப்பட்டினம் கிளை சார்பில் சால்வை அணிவித்து கௌரவிக்கப்பட்டது.

இச்சந்திப்பில்  மமக மல்லிப்பட்டினம்  கிளை தலைவர் PMS.செய்யது முகமது புகாரி,கிளை செயலாளர் M.அப்துல் ஹமீது,கிளை பொருளாளர் வழக்கறிஞர் M. முகமது சுபுகான் மற்றும்  M.அப்துல் பகத் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.






Post a Comment

Previous Post Next Post