தஞ்சையில் ஹஜ் புனித பயணம் செல்பவர்களுக்கு தடுப்பூசி முகாம்..!



தமிழ்நாடு மாநில ஹஜ் குழு மூலம் இந்த ஆண்டு சவூதி அரேபியாவில் உள்ள மக்கா மாநகரத்துக்கு புனித ஹஜ் பயணம் செல்லக்கூடிய இஸ்லாமியர்களுக்கு தஞ்சை மாவட்ட பொது சுகாதார துறை சார்பில் தடுப்பூசி முகாம் தஞ்சை கீழவாசலில் உள்ள மதினா பள்ளிவாசலில் நடந்தது. தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்ட ஹஜ் பயணிகள் ஒருங்கிணைப்பாளரும், அம்மாப்பேட்டை முன்னாள் ஒன் றியக்குழு தலைவருமான சுலைமான் பாட்சா முன்னிலை வகித்தார். தஞ்சை மாவட்ட சுகாதார அலுவலர் டாக்டர். கலைவாணி மேற்பார்வையில் நடைபெற்ற முகாமில் மாவட்ட கொள்ளை நோய் தடுப்பு அலுவலர் டாக்டர். இளவரசன், தரக்கட்டுப்பாடு மருத்துவ அலுவலர் சரண்யா, தாய்சேய் நல அலுவலர் டாக்டர் புவனேஸ்வரி, டாக்டர்கள் கவுரி சங்கர், ஆல்வின் லியோனார்டு, பிரவினா, காயத்திரி ஆகியோர் கொண்ட மருத்துவக்குழுவினர் ஹஜ் புனித பய ணம் செல்லும் பயணிகளின் ஆவணங்களை சரிபார்த்து தடுப்பூசி செலுத்தினர். தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த 318 ஹஜ் பயணிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது.

இதில் சமூக ஆர்வலர் அம்மாபேட்டை வஹாப் பெட்ரோல் பங்க் தாஜீதீன், கோவிலூர் ரஹமத்துல்லா, வடக்கு மாங்குடி சஹதுல்லா, தமிழ்நாடு ஹஜ் சொசைட்டி தன்னார்லர்கள் நசுருதீன், சையது இப்ராஹிம், மதினா பள்ளிவாசல் தலைவர் சிராஜீதீன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Post a Comment

Previous Post Next Post