தஞ்சை மாவட்டம்,மல்லிப்பட்டினத்தில் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் மாவட்ட பொறுப்புக்குழு தலைவர் அப்துல் மாலிக் தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள் முகமது இல்யாஸ்,சாகுல் ஹமீது,முகமது சேக் ராவுத்ததர்,ஹாஜா மைதீன் மற்றும் இத்ரீஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக மமக மாநில துணைச் செயலாளர் தஞ்சை பாதுஷ, இஸ்லாமிய பிரச்சார பேரவை மாநில செயலாளர் திருச்சி ரபீக் ஆகியோர் கலந்துக் கொண்டு சிறப்புரையாற்றினர்...
மல்லிப்பட்டினம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புகளில் முதல் மூன்று மதிப்பெண் எடுத்துவர்களுக்கு மாவட்ட பொதுக்குழுவில் கேடயம் வழங்கி பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.
மேலும் பொதுக்குழுவில் மாவட்ட நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்றது.
இதில் தஞ்சை தெற்கு மாவட்ட தமுமுக மமக தலைவராக மதுக்கூர் ஃபவாஸ், தமுமுக மாவட்ட செயலாளராக அதிரை அப்துல் மாலிக்,மமக மாவட்ட செயலாளர் மல்லிபட்டினம் ஃபஹத், தமுமுக மமக மாவட்ட பொருளாளர் பட்டுக்கோட்டை ஜெகபர் அலி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
மாவட்ட பொதுக்குழுவில் தஞ்சை மாவட்டம்,மல்லிப்பட்டினம் காசிம் அப்பா தெரு,காயிதே மில்லத் நகர்,நொண்டி தோப்பு ஆகிய பகுதிகளில் உள்ள 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ள பகுதிகளை சரபேந்திரராஜன்பட்டினம் ஊராட்சியில் இணைக்க வேண்டும், தஞ்சை மாவட்டம்,ஷாபி இமாம் தெரு-புதுமணைத்தெரு இடையே உள்ள பகுதிகளில் குளங்களில் தேங்கியுள்ள குப்பையை அகற்றி, பூங்கா அமைத்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் உள்ளிட்ட12 தீர்மானங்கள் இயற்றப்பட்டன. இறுதியாக மமக மாவட்ட செயலாளர் அப்துல் பகத் நன்றியுரையாற்றினார்.




Post a Comment