தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கைக்கான, முதல்கட்ட கலந்தாய்வு, மே. 28 செவ்வாய்க்கிழமை தொடங்கியது என கல்லூரி முதல்வர் முனைவர் இரா. திருமலைசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது,
"பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி. ஏ. , பி. எஸ்சி. , பி. காம். , மற்றும் பி. பி. ஏ. , ஆகிய படிப்புகளில் சேர விண்ணப்பித்துள்ள தகுதியுடைய விளையாட்டு வீரர்கள், தேசிய மாணவர் படை மாணவர்கள், மாற்றுத் திறனாளி மாணவர்கள், முன்னாள் ராணுவத்தினர் மற்றும் பாதுகாப்புப் படை வீரர்களின் குழந்தைகள் உள்ளிட்ட சிறப்பு ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு மே 28, 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெறும்.
ஜூன் 10ம் தேதி பி. காம். , பி. பி. ஏ. , பி. ஏ. , தமிழ், பி. ஏ. , ஆங்கிலம் ஆகிய பாடப்பிரிவுகளுக்கும் ஜூன் 11 ம் தேதி பி. எஸ்சி (கணிதம்), பி. எஸ்சி (கணினி அறிவியல்), பி. எஸ்சி (இயற்பியல்), பி. எஸ்சி (வேதியியல்), பி. ஏ, (தமிழ்) மற்றும் பி. ஏ (ஆங்கிலம்) ஆகிய பாடப்பிரிவுகளுக்கும் முதல் கட்டப் பொதுக் கலந்தாய்வு நடைபெறும்.
இரண்டாம் கட்ட பொது கலந்தாய்வு ஜூன் 24 முதல் ஜூன் 29 வரை நடைபெறும்" இவ்வாறு தெரிவித்தார்.

Post a Comment