மீன்பிடி தடைக்காலம் எதிரொலி மீன்கள் விலை கடும் உயர்வு.!

 



தஞ்சை மாவட்ட கடல் பகுதியில் மீன் பிடி தடைக்காலத்தையொட்டி விசைப்படகுகள் கடலுக்குச் செல்லாததால் வரத்து குறைந்தது. இதன் காரணமாக மீன்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. ஏப்ரல் 15 முதல் ஜூன் 15 வரை 61 நாட்களுக்கு விசைப்படகுகள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல அரசு தடை விதித்துள்ளது. இதனால் விசைப்படகுகள் கடலுக்கு செல்வதில்லை. நாட்டுப் படகு மீனவர்கள் மட்டுமே குறைந்த அளவு மீன்களை பிடித்து வருகின்றனர். மல்லிப்பட்டினம், சேதுபாவாசத்திரம் உள்ளிட்ட மீன்பிடித் துறைமுகங்களில் வியாபாரிகள் மீன்களை வாங்கி வெளியூர்களுக்கு கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர். 

தற்போது விசைப்படகுகள் மூலம் மீன் பிடிக்கப்படாததால் மீன்கள் வரத்து குறைந்து காணப்படுகிறது. கிலோ ரூ. 300-க்கு விற்படுக்கப்பட்ட காளை மீன் தற்போது ரூ. 700 முதல் 900 வரை விற்பனை செய்யப்படுகிறது. ரூ. 250க்கும விற்கப்பட்ட வாவல் மீன் கிலோ ரூ. 800 வரை விற்பனை செய்யப்படுகிறது. ரூ. 150 ரூபாய் விற்பனை செய்யப்பட்ட பொடிமீன்கள் ரூ. 450 வரைக்கும், ரூ. 300 க்கு விற்கப்பட்ட இறால் ரூ. 650 முதல் ரூ. 700 வரை விற்பனை செய்யப்படுகிறது. ரூ. 300க்கு விற்கப்பட்ட நண்டு ரூ. 800 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கருவாடு விலைகளும் கன்னாபின்னா என உயர்ந்துள்ளது. வரத்து குறைவாலும் விலை உயர்வாலும் பொது மக்களுக்கு மீன்கள் கிடைப்பதில் தட்டுப்பாடு உள்ளது.

Post a Comment

Previous Post Next Post