மல்லிப்பட்டினத்தில் இரத்த தான முகாம்.!

 



தஞ்சை மாவட்டம்,மல்லிப்பட்டினத்தில் கிரசன்ட் ப்ளட் டோனர்ஸ்,தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனை இரத்த வங்கி மற்றும் முகைதீன் ஜூம்ஆ பள்ளிவாசல் நிர்வாகம் ஆகியோர் இணைந்து உலக இரத்த தான தினத்தையொட்டி மாபெரும் இரத்த தானம் முகாமை பள்ளி மதராஷாவில் நடத்தினர்.

முகாமில் இளைஞர்கள் ஆர்வத்துடன் கலந்துக்கொண்டனர்.இதில் கலந்துக்கொண்டு இரத்த தானம் வழங்கிய கொடையாளர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.இந்நிகழ்வில் பேராசியர் அகமது கபீர்,மருத்துவர் ஜியாவூர் ரஹ்மான்,கூட்டறவு சங்க தலைவர் அப்துல் சமது,மல்லிப்பட்டினம் கிளை தலைவர் அப்துல் பகத்,தமுமுக-மமக கிளை தலைவர் செய்யது புகாரி,சமுதாய நலமன்ற செயலாளர் ரகாலி,அப்துல் ஹலீம்,திமுக கிளை துணைச் செயலாளர் நூருல் அமீன்,ராமர் கோவில் பஞ்சாயத்தார்கள்,முத்துப்பேட்டை,அதிரை,மல்லிப்பட்டினம் கிரசன்ட் ப்ளட் டோனர்ஸ் அமைப்பின் உறுப்பினர்கள்,ராமர் கோவில் பஞ்சாயத்தார்கள் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.


இவையனைத்திற்கும் சிறப்பு ஏற்பாடுகளை தொடங்கிய முதலே நிறைவு வரை உறுதுணையாக சமூக. ஆர்வலர் அசன் முகைதீன் இருந்தார். 









Post a Comment

Previous Post Next Post