தஞ்சை மாவட்டம்,மல்லிப்பட்டினம்,காயிதே மில்லத் நகருக்கு எதிரே கிழக்கு கடற்கரை சாலையில் அதிகமான வாகன விபத்துக்களும்,உயிர் பலியும் ஏற்படுவதால் கடந்த ஆண்டு மார்ச் மாதம் மல்லிப்பட்டினம் சமுதாய நலமன்றத்தின் முயற்சியால் பேரிகாட் சேதுபாவாசத்திரம் காவல்நிலையம் சார்பில் வைக்கப்பட்டது.இதனால் வாகன விபத்துகள் குறைந்து காணப்பட்டன.
மத்திய அமைச்சர் வருகையின் போது காயிதே மில்லத் நகர் எதிரே உள்ள கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து எடுக்கப்பட்ட டிஜிட்டல் பேரிகாட்டை இன்று வரை திரும்ப வைக்கப்படாமலே உள்ளது.இதனால் அந்த பகுதியில் வாகன விபத்துகள் அடிக்கடி நடைபெறுகிறது.
ஆகவே தயவு கூர்ந்து தேசிய நெடுஞ்சாலை மற்றும் காவல்துறையினர் ஏற்கனவே செயல்பாட்டில் இருந்த டிஜிட்டல் பேரிகாட்டை அதை இடத்தில் வைத்து வாகன விபத்துக்களையும்,உயிர் சேதங்கள் ஏற்படாமல் இருக்கவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் சேதுபாவாசத்திரம் காவல் நிலையத்தில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் மல்லிப்பட்டினம் கிளை பொருளாளர் வழக்கறிஞர் முகமது சுபுகான் கோரிக்கை வைத்தார்.

Post a Comment