இறால் வளர்ப்பிற்கு மானியம் விண்ணப்பிக்க செப்.25 கடைசி நாள்..

 



பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் கொடுவாய் மீன் - (Sea bass) உற்பத்தியை அதிகரிக்கவும் மற்றும் புதிதாக கொடுவாய் மீன்குளங்கள் அமைத்திட விரும்புவோர்கள் பயன்பெறும் வகையில் புதிய மீன்குளங்கள் அமைக்கவும், அதற்கான உள்ளீட்டு செலவினங்களுக்கு மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பொதுப்பிரிவினருக்கு 3 ஹெக்டேர் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு, தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது.


இத்திட்டத்தின் கீழ் புதிய மீன்குளம் ஒரு ஹெக்டேர் அளவில் அமைத்திட செலவினம் ரூ. 8 லட்சம் எனவும் உள்ளீட்டு செலவினம் ரூ. 6 லட்சம் எனவும், பொதுப்பிரிவினருக்கு 40% மானியமாக ரூ. 5. 60 லட்சம் வழங்கப்பட உள்ளது. மேலும், உவர்நீர் இறால் வளர்ப்பிற்காக புதிய குளங்கள் கட்டுதல் மற்றும் உள்ளீட்டு செலவினங்களுக்கான மானியம் பொதுப்பிரிவினருக்கு 6 ஹெக்டேர் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. இதில் பதிய இறால் வளர்ப்பு குளம் அமைப்பதற்கும் மற்றும் உள்ளீட்டு செலவினத்திற்கான மொத்த செலவினம் ரூ. 14 லட்சத்தில் 40% மானியமாக ரூ. 5.60 லட்சம் மானியமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்க விரும்பும் இறால் வளர்ப்பு விவசாயிகள் உதவி இயக்குநர், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, தஞ்சாவூர், எண்: 873/4, அறிஞர் அண்ணாசாலை, கீழவாசல் அலுவலக முகவரியில் நேரிலோ அல்லது 04362-235389 என்ற எண்ணிலோ தொடர்பு கொண்டு,  25.09.2024க்குள் விண்ணப்பிக்கலாம்.

Post a Comment

Previous Post Next Post