மல்லிப்பட்டினம் காசிம் அப்பா தெரு,அபுல் ஹசன் நகர் ஆகிய பகுதிகளை சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சியில் இணைக்க கோரிக்கை.!





தஞ்சை மாவட்டம்,சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சியில் மல்லிப்பட்டினம் பகுதிகளை இணைத்திட மக்களுடன் முதல்வர் முகாமில் காங்கிரஸ் மாவட்ட பொதுச்செயலாளர் கமால் பாட்ஷா கோரிக்கை.

மல்லிப்பட்டினம்  காசிம் அப்பா தெரு,அபுல்ஹசன் நகர்,காயிதே மில்லத் நகர் ஆகிய பகுதிகள் ஆண்டிக்காடு ஊராட்சியில் இருப்பதால் அந்த பகுதிக்கு தேவையான அடிப்படை வசதிகள் பெறுவதில் பெரும் சிக்கல் இருந்து வருகிறது.

அந்த சிக்கலை தீர்த்திடும் வகையில் சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சியிலே அந்த பகுதிகளையும் இணைத்திடவேண்டும் என்று கோரிகை மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post