காயிதே மில்லத் நகரில் சாலை அமைத்திட அழுத்தம் தர தமிழ்நாடு மீனவர் நலவாரிய துணைத்தலைவரிடம் கோரிக்கை மனு.!





 தஞ்சை மாவட்டம்,மல்லிப்பட்டினம் , காயிதேமில்லத் நகர் வாஹிது சாலை பகுதியில் 50 மீட்டர் சாலை மற்றும் வடிகால் சம்மந்தமாக தமிழ் நாடு மீனவர் நல வாரிய மாநில துணை தலைவர் AK.தாஜிதின்  மற்றும் காங்கிரஸ் கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட பொது செயலாளர் AK.கமால் பாட்ஷா அவர்களுக்கும் காயிதேமில்லத் நகர் வாஹிது சாலை பகுதி மக்கள் சார்பாக மனுக்கள் கொடுக்கப்பட்டது.

 சட்டமன்ற உறுப்பினர் திரு அசோக் குமார் MLA அவர்களிடம் கூறி மழைக்காலம் துவங்கும் முன் அந்த 50மீட்டர் சாலை பூர்த்தி செய்யப்படும்.  அதற்காக அதிகாரிகளிடத்தில் பேசி முயற்சி செய்வோம் என்று உறுதி அளித்துள்ளார்கள்.


 

1 Comments

  1. மல்லி நியூஸ் நண்பர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகளை காயிதேமில்லத் நகர் வாஹிது சாலை பகுதி மக்கள் சார்பாக நன்றியுடன் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்

    ReplyDelete

Post a Comment

Previous Post Next Post