அதிரையை தாலுகாவாக அறிவிக்க வேண்டும் மமக மாவட்ட பொதுக்குழுவில் தீர்மானம்.!

  



மனிதநேய மக்கள் கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட பொதுக்குழு அதிராம்பட்டினம் பவித்ரா திருமண மண்டபத்தில் (27.9.2024) அன்று வெள்ளிக்கிழமை தமுமுக மமக தஞ்சை தெற்கு மாவட்ட துணைத்தலைவர் SA.இத்ரீஸ் அகமது அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

தமுமுக மாநில செயற்குழு உறுப்பினர் M.நசுருதீன் சாலிஹ்,மமக மாவட்ட செயலாளர் M.அப்துல் பகத்,மமக மாவட்ட துணை செயலாளர்கள் SMA.சாகுல் ஹமீது,A.முகமது இலியாஸ்,மமக மாவட்ட பொருளாளர் M.ஜெகுபர் அலி,தமுமுக மாவட்ட செயலாளர் A.அப்துல் மாலிக்,தமுமுக மாவட்ட துணை செயலாளர்கள் RM. நெய்னா முகமது,M.புரோஸ்கான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மமக மாவட்ட பொதுக்குழுவில் மாநில துணைப் பொதுச்செயலாளர் I.M.பாதுஷா அவர்கள்,மாநில பேச்சாளர் கோவை செய்யது அவர்கள்மற்றும் தமுமுக மக்கள் உரிமை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அணியின் மாநில செயலாளர் வழக்கறிஞர் L.தீன்முகம்மது ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினர்.

மாவட்ட பொதுக்குழுவில் அதிராம்பட்டினத்தை தாலுகாவாக அறிவிக்க வேண்டும் போன்ற பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.இதில் தமுமுக மமக நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்துக்கொண்டனர்.










Post a Comment

Previous Post Next Post