முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் 33 அமைச்சர்களுடன் தமிழக அமைச்சரவை இயங்கி வருகிறது. இந்நிலையில் தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக நாளை (செப்.29) பதவியேற்கிறார் உதயநிதி ஸ்டாலின்;
நாளை பிற்பகல் 3:30 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெறவுள்ளதாக ஆளுநர் மாளிகை அறிவிப்பு
செந்தில் பாலாஜி, நாசர், ஆகியோர் மீண்டும் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர்;
அரசு கொறடாவாக உள்ள கோ.வி. செழியன் மற்றும் ஆர்.ராஜேந்திரன் ஆகியோருக்கு புதிதாக அமைச்சர் பதவி;
செஞ்சி மஸ்தான், மனோ தங்கராஜ், க. ராமச்சந்திரன் ஆகியோர் அமைச்சரவையில் இருந்து நீக்கம்
Post a Comment