மல்லிப்பட்டினத்தை அடுத்த கீழத்தோட்டம் கடற்கரையில் 2 கோடி மதிப்பிலான போதைப்பொருள் சிக்கியது !

 


தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினத்தை அடுத்த ராஜாமடம் ஊராட்சிக்குட்பட்ட கீழத்தோட்டம் கடற்கரையில், பாலித்தீன் பையில் கிடந்த மர்ம பொருளை பட்டுக்கோட்டை கடலோர காவல் குழும போலீசார் கைப்பற்றி ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்தனர். 

இந்த ஆய்வில் அது மெத்தம்பேட்டமைன் (எ) போதை பொருள் என தெரியவந்தது. 

900 கிராம் எடை கொண்ட அந்த போதை பொருள் இதன் மொத்த மதிப்பு சுமார் ரூ.2 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Post a Comment

Previous Post Next Post