திருச்சியில் இருந்து தஞ்சாவூர்வழி யாக தாம்பரம் வரை இயக்கப்படும் புதிய சிறப்பு ரயிலை தினசரி இயக்க வேண்டும் என ரயில்வே வாரிய தலைவரிடம் தஞ்சாவூர் எம்பி முரசொலி கோரிக்கை மனு வழங்கியுள்ளார். தஞ்சாவூர் எம்பி முரசொலி நேற்று டெல்லியில் ரயில்வே வாரிய தலைவர் சதீஷ்குமாரை சந்தித்து மனு அளித்தார். அப்போது தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதி மக்களின் பல்வேறு ரயில் திட்டத்திற்கான கோரிக்கைகளை மனுவாக வழங்கினார். அதில் திருச்சியில் இருந்து தஞ்சாவூர் வழியாக தாம்பரம் வரை இயக்கப்படும் புதிய சிறப்பு ரயிலை தினசரி இயக்குவதற்கு நெறிமுறை படுத்துமாறு கோரிக்கை வைத்தார். இதை எடுத்து இந்த கோரிக்கை மீது விரைந்து நடவடிக்கை எடுப்பதாக ரயில்வே வாரிய தலைவர் உறுதியளித்தார்.
தாம்பரம் ரயிலை தினமும் இயக்க வாரிய தலைவரிடம், தஞ்சாவூர் எம்பி முரசொலி மனு..!
புதியவன்
0
Post a Comment