தஞ்சை மாவட்டம்,மல்லிப்பட்டினம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் ஆசிரியையாக பணிபுரிந்து வந்த சின்னமனையை சேர்ந்த ரமணி என்பவரை மதன் என்னும் காட்டுமிராண்டி அயோக்கியனால் பள்ளி அறைக்குள் புகுந்து கத்தியால் குத்தி கொல்லப்பட்ட சம்பவம் மிகுந்த அதிர்ச்சியையும்,வேதனையும் அளிக்கிறது. ஆசிரியை ரமணியை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு இந்த இக்கட்டான நேரத்தில் எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும்,அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.மேலும்இந்த குற்றச்செயலில் ஈடுபட்ட அயோக்கியன் மதனை கடுமையான சட்டத்தின் மூலம் தண்டித்திட வேண்டும்.
மேலும் ஐநூறுக்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் படிக்கும் பள்ளியில் ஒரு பாதுகாவலர் இல்லாததும், உரிய அனுமதியின்றி உள்ளே வந்து குத்தும் அளவிற்கு கவனக்குறைவை பார்க்க முடிகிறது.இது போன்ற சம்பவங்கள் வரும்காலங்களில் நிகழாமல் இருக்க அனைத்து அரசு பள்ளி முழுவதும் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும்,பள்ளி மாணவ,மாணவியர்கள்,ஆசிரியர்களை பாதுகாக்கும் வண்ணம் பள்ளிக்கு ஒரு பாதுகாவலரை நியமித்து வெளிநபர்கள் உரிய அனுமதியின்றி உள்ளே வர அனுமதிக்காமல் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும்.இதற்குண்டான உரிய நடவடிக்கைகளை மாவட்ட பள்ளிக்கல்வித்துறையும்,அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களும் உடனடியாக எடுத்திட வேண்டும் என எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் வேண்டுகோள் விடுக்கிறேன்.
மேலும் உயிரழந்த பள்ளி ஆசிரியைக்கு பள்ளியில் வைத்து கத்தியால் கொல்லப்பட்டதால் 25 லட்சம் நிவாரணத்தை அரசு அறிவிக்க வேண்டும்.கொலையாளி மதனுக்கு உரிய தண்டனையும் பெற்றிட அரசு வழிவகை செய்யவேண்டும் என எஸ்டிபிஐ கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் கோரிக்கை வைத்துள்ளார்.
Post a Comment