மல்லிப்பட்டினம் அரசினர் மேல்நிலைப்பள்ளி கொலை சம்பவம் மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்..!

 




தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வரும் ரமணி என்பவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. இந்த துயரத்து சம்பவத்தில் ஆசிரியை ரமணி அவர்களின் குடும்பத்திற்கு மனிதநேய மக்கள் கட்சி சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.


பள்ளி வகுப்பறையில் நடைபெற்ற சம்பவத்தில் கொலையாளி மதன் மீது உரிய சட்ட நடவடிக்கை மூலம் தண்டிக்கப்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறோம்.மேலும் பள்ளியிலே நடைபெற்ற இந்த சம்பவத்தில் கொலை செய்யப்பட்ட ரமணி அவர்களின் குடும்பத்தினருக்கு அரசு உரிய நிவாரணத்தை வழங்கிட வேண்டும் என்றும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கோரிக்கை வைக்கிறோம்.


M.அப்துல் பகத்.DME

மாவட்ட செயலாளர்

தஞ்சை தெற்கு மாவட்டம்.

மனிதநேய மக்கள் கட்சி

Post a Comment

Previous Post Next Post