தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசு மேனிலைப் பள்ளியில் வைத்து இன்று காலையில் கொலை செய்யப்பட்ட பள்ளி ஆசிரியை ரமணியின் கொலை கண்டன கோரிக்கை ஆர்ப்பாட்டம் இன்று (20.11.2024) மாலை 5 மணியளவில் மல்லிப்பட்டினம் ஆட்டோ நிறுத்தம் ECR சாலையில் நடைபெற உள்ளது. பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்.
*நான்கு கோரிக்கைகள்:*
1. ஆசிரியை ரமணியை கொடூரமான முறையில் கொலை செய்த மதன் என்ற கொலைக் குற்றவாளிக்கு அதிக பட்ச தண்டனை வழங்க வேண்டும்.
2. கொலை செய்யப்பட்ட ஆசிரியை ரமணி குடும்பத்தினருக்கு இழப்பீடு தொகையாக ரூ. 25 இலட்சம் வழங்க வேண்டும்.*
3. தமிழக அரசு கொலை செய்யப்பட்ட ஆசிரியை ரமணியின் குடும்பத்தினரில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.
4. மாணவ மாணவிகளுக்கும் அரசு பள்ளி ஆசிரிய பணியாளர்களுக்கு மத்தியிலும் அரசு பள்ளியில் வைத்தே நடந்த இந்த கொலை சம்பவத்தின் விளைவால் ஏற்பட்ட அனைவருக்கும் ஏற்பட்ட அச்ச உணர்வு நீங்கவும் இது போன்ற மனிதாபிமானமற்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க அரசு பள்ளிகளில் ஆசிரியர்களுக்கும், மாணவ மாணவிகளுக்கும் தமிழக அரசு உரிய பாதுகாப்பை ஏற்படுத்தி தர வேண்டும்.
Post a Comment