தஞ்சை மாவட்டம் சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சி,மல்லிப்பட்டினம் ஷாபி இமாம் தெருவில் சுகாதார சீர்கேடுகள் ஏற்பட்டு நோய் தொற்று பரவும் அபாயம் உருவாகி இருக்கிறது.
ஷாபி இமாம்தெரு புதுமனைத்தெரு இடையே அமைந்துள்ள புது குளத்தில் பிளாஸ்டிக் கழிவுகள்,குப்பைகள் ஆகியவை காரணமாக துர்நாற்றம் வீசுகிறது, குளத்தில் இருந்து கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு,மலேரியா போன்ற பல்வேறு நோய் தொற்று பரவும் அபாய சூழல் இருக்கிறது.
மேலும் மல்லிப்பட்டினம் ஷாபி இமாம் தெருவில் தான் ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது இங்கு பிறந்த குழந்தைகள், கர்ப்பிணிகள் ஆகியோருக்கு தடுப்பூசிகள், மாதாந்திர பரிசோதனை நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது,ஆகவே மாவட்ட ஊராட்சி நிர்வாகம் இதனை கருத்தில் கொண்டு புதுக்குளத்தை சுற்றியுள்ள பகுதிகளை பூங்காவாக உருவாக்கி மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கையாக இருக்கிறது.
Post a Comment