தஞ்சை மாவட்டம்,மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு மனோதத்துவ நிபுணர்கள் மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியை ரமணி மதன் என்பவனால் பள்ளி வளாகத்திலே வைத்து கத்தியால் கொல்லப்பட்டார்.அரைமணிநேரத்திற்குள் மதன் கைது செய்யப்பட்டான்.இந்த சம்பவத்தால் பெரிதும் பயத்தாலும்,மனதளவில் பாதிகப்பட்ட ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு மன உறுதி ஏற்படுத்தும் வகையில் நிகழ்ச்சி ஏற்படுத்தப்படும் என பள்ளிகல்வித்துறை அமைச்சர் முன்னதாக செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்து இருந்தார்.அதனடிப்படையில் பல்வேறு கருத்துக்கள், உற்சாகப்படுத்தும் ஆலோசனைகளை மனோதத்துவ மருத்துவர்கள் விழிப்புணர்வை வழங்கினர்.
இந்நிலையில் இன்று(நவ.25) நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.இதில் பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் அசோக்குமார்,சேதுபாவாசத்திரம் ஒன்றிய தலைவர் முத்துமாணிக்கம்,பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை மருத்துவர் மற்றும் மனோதத்துவ மருத்துவர்கள் கலந்துக்கொண்டனர்.
இதில் சுமார் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் 400க்கும் மேற்பட்டோர் கலந்ததுக்கொண்டனர்.
Post a Comment