தஞ்சை மாவட்டம், மல்லிப்பட்டினத்தில் கொல்லைப்பட்ட அரசுமேல்நிலைப்பள்ளி ஆசிரியை ரமணியின் குடும்பத்தினரை சந்தித்து மஜக மாநில பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி சந்தித்து இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்தார்.
இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் ஆசிரியை ரமணியின் குடும்பத்திற்கு இரங்கலை தெரிவித்தார்.மேலும் தமிழக அரசு அளித்த கருணைத்தொகை ரூபாய் 5 லட்சத்திலிருந்து 10 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும்.மேலும் ஆசிரியை ரமணியின் குடும்பத்தினர் தகுதியின் அடிப்படையில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.
இதில் மாவட்ட செயலாளர் அதிரை சேக்,மாநில துணை செயலாளர் சலாம்,இளைஞரணி மாவட்ட செயலாளர் முகமது ராபீக்,நகர செயலாளர் மெஹ்ரான் மற்றும் மாவட்ட,நகர நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர்.
Post a Comment