தமிழகத்தில் தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், இன்று 27 நவம்பர் நள்ளிரவு முதல் மல்லிப்பட்டினத்தில் இடைவிடாத கனத்த மழை பெய்து வருகின்றது.
இந்த சூழ்நிலையில் பிரபலமான ஊடகங்கள் மல்லிப்பட்டினத்தில் கடல் சீற்றம் எனவும் கடல் மட்டம் அதிகரித்து கடல் நீர் ஊருக்குள் செல்லும் அபாயம் உள்ளதாக மக்களை பீதியில் தள்ளிய சம்பவம் அரங்கேறி உள்ளது.
இந்த செய்தியை பார்த்த உள்ளூர் மக்கள் கடலுக்கு சென்று பார்த்த பொழுது அங்கு எந்த விதமான கடல் சீற்றமும் இல்லை என்பதைப் பார்த்தனர். இருந்தாலும் வெளிநாடுகளிலும் வெளியூர்களிலும் இருக்கும் மல்லிப்பட்டினத்தைச் சேர்ந்த மக்கள் தங்களுடைய உறவினர்களுக்கு தொடர்பு கொண்டு இவ்வாறு கடல் சீற்றமாக உள்ளதாம் எனவே நீங்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுங்கள் என கூறி வருகின்றனர்.
ஆனால் உண்மையில் கடல் சீற்றம் இல்லை. இந்த மாதிரியான போலியான செய்திகளை ஊடகங்கள் இனிமேல் பரப்ப வேண்டாம் எனவும் இதனால் மக்கள் பீதி அடைந்து பரபரப்பான நிலைக்கு ஆளாகின்றனர் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும் கடல் சீற்றத்துடன் ஒரு வீடியோ காணொளி அனைவரும் தங்களுடைய whatsapp ஸ்டேட்டஸ் ஆகவும் , மற்ற whatsapp குழுமங்களிலும் பரப்பி வருகின்றனர். அந்த வீடியோ காணொளி கஜா புயலின் போது எடுக்கப்பட்டது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
Post a Comment