தஞ்சை மாவட்டம்,மல்லிப்பட்டினம் மழைநீர் தேங்கியுள்ள குடியிருப்பு பகுதிகளில் பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் ஆய்வு.
கடந்த மூன்று நாட்களாக டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது, இதனால் தஞ்சை மாவட்டம்,மல்லிப்பட்டினம் காசிம் அப்பா தெரு குடியிருப்புகளுக்குள் மழைநீர் புகுந்தது இதனால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.
சட்டமன்ற உறுப்பினர் உத்தரவின்பேரில் கோட்டாட்சியர் பார்வையிட்டு நேற்று(நவ.27) ஜேசிபி இயந்திரம் கொண்டு வெளியேற்றப்பட்டு வந்தது.இந்நிலையில் இன்று(நவ.28) மல்லிப்பட்டினத்தில் காசிம் அப்பா தெரு,காயிதே மில்லத் நகர்,வடக்கு தெரு,துறைமுகம் உள்ளிட்ட பல பகுதிகளில் நேரடியாக ஆய்வுகளை மேற்கொண்டார்.அந்தந்த பகுதிகளில் உள்ள பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர், அதனை கேட்ட சட்டமன்ற உறுப்பினர் செய்து தருவதாக வாக்குறுதியளித்தார்.
இதில் மல்லிப்பட்டினம் திமுக கிளை செயலாளர்,மாவட்ட பிரதிநிதி ஹபீப் முகமது,மாநில மீனவர் நலவாரிய துணைத்தலைவர் தாஜூதீன்,கிளை துணைச்செயலாளர் நூருல் அமீன்,காங்கிரஸ் மாவட்ட பொதுச்செயலாளர் கமால் பாட்ஷா,காங்கிரஸ் மாவட்ட சிறுபான்மை தலைவர் நாகூர்கனி,தமிழக வாழ்வுரிமை கட்சி மாவட்ட செயலாளர் பஷீர் அகமது,ஜமாஅத் செயலாளர் அப்துர் ரஹீம் ஆகியோர் உடனிருந்தனர்.
Post a Comment