மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியை படுகொலை சம்பவம் அமைச்சர் கோவி.செழியன் நேரில் ஆய்வு..!




 தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் சின்னமனையை சேர்ந்த ரமணி (26) பயிற்சி ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.


இந்நிலையில் சின்னமனையை சேர்ந்த  மதன் s/o பன்னீர் செல்வம் என்பவன் பள்ளிக்கு உள்ளே வந்து ஆசிரியை இருந்த மாடியில் ஏறி, தான் மறைத்து வைத்திருந்த கத்தியை கொண்டு ஆசிரியையின் கழுத்து மற்றும் இடுப்பில் குத்திவிட்டு சென்றான்.


இதனை கண்டு அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள் கூச்சலிட்டு குத்தியவனை பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.


இரத்த வெளத்தில் உயிருக்கு போராடி கொண்டு இருந்த  ஆசிரியை மீட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவனைக்கு கொண்டு செல்லும் வழியிலே ஆசிரியை இறந்துவிட்டார்.


கத்தியால் குத்திய மதனை கைது செய்து சேதுபாவாசத்திரம் காவல்நிலையத்தில் கொண்டு விசாரணை செய்து வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது. காலையில் இருந்து சம்பவ இடத்திலே இருந்து ஆய்வுகளை,அரசு அதிகாரிகளை பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் அசோக்குமார் சந்தித்து வந்தார்.மேலும் மாலை நேரத்தில் சம்பவ இடத்திற்கு உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் பார்வையிட்டு வருகிறார்.தகவல்களை கேட்டு வருகிறார்.


Post a Comment

Previous Post Next Post