அஇஅதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை நேரில் சந்தித்து வக்ஃப் சட்ட திருத்த மசோதாவிற்கு எதிராக மாநிலங்களவையில் வாக்களிக்க வலியுறுத்தி, கோரிக்கை மனுவை TNTJ மாநில நிர்வாகிகள் நேரில் சந்தித்து வழங்கினர்.
1. அஇஅதிமுக மாநிலங்களவை உறுப்பினர்கள் வக்ஃப் சட்ட திருத்த மசோதாவிற்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
2. பாராளுமன்ற கூட்டுக்குழுவில் உள்ள உறுப்பினர்கள் அதைவிட்டு வெளியேறி இருக்கிறார்கள். கூட்டுக்குழுவின் தலைவர் ஆளும் கட்சிக்கு ஆதரவாகவே உள்ளார். இதை கண்டிக்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
3. முஸ்லிம்களின் இட ஒதுக்கீட்டை ஏழு சதவீதமாக உயர்த்த அரசுக்கு கோரிக்கை வைக்க வலியுறுத்தப்பட்டது.
Post a Comment