சுனாமி கோரத்தாண்டவத்தின் 20வது ஆண்டு நினைவு தினம் இன்று
2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி அதிகாலை இந்தோனேசியாவில் உள்ள சுமத்ரா தீவுக் கடல் பகுதியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால், உலகின் பல்வேறு பகுதிகளை சுனாமி தாக்கியது. இதில், 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்; ஆயிரக்கணக்கானோரைக் காணவில்லை.
தமிழ்நாட்டில் சுனாமி தாக்குதலால் சென்னை முதல் கன்னியாகுமரி வரையிலான கிழக்குக் கடலோரப் பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதில், ஏராளமானோர் உயிரிழந்தனர்.
உலகையே நிலைகுலைய செய்த பெரும் துயர சம்பவமாக இந்நிகழ்வு பார்க்கப்படுகிறது.












Post a Comment