தஞ்சை மாவட்ட விசைப்படகு சங்கம் சார்பாக மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அலுவலகம் முற்றுகை போராட்டம் அறிவிப்பு.!



 தஞ்சை மாவட்ட பாரம்பரிய விசைப்படகு மீனவர் சங்க அவசர ஆலோசனை கூட்டம் மீன்வளத்துறை அலுவலகத்தில் உள்ள ஏலக்கூடத்தில் இன்று(டிச.26) தஞ்சை மாவட்ட தலைவர் இராசமாணிக்கம் தலைமையிலும், மாவட்ட செயலாளர் வடுகநாதன்,மல்லிப்பட்டினம் விசைப்படகு உரிமையாளர்கள் சங்க தலைவர் இளங்கோ, சேதுபாவாசத்திரம் செல்லக்கிளி,மல்லிப்பட்டினம் வடக்கு பாரம்பரிய நலசங்க பொருளாளர் முகமது ஜலாலுதீன்,மல்லிப்பட்டினம் விசைப்படகு உரிமையாளர்கள் நல சங்க தலைவர் ஹபீப் முஹம்மது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் மீனவர்கள் மற்றும் விசைப்படகு உரிமையாளர்களுடன் அரசுக்கு கெட்டப் பெயர் ஏற்படுத்தும் நோக்கில் செயல்படும் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அலுவலர்களை மாற்றம் செய்து புதிய அலுவலர்களை நியமனம் செய்ய வேண்டும்.

டிச.25 அன்று கரையில் இழுத்ததாக கூறி நான்கு தஞ்சை மாவட்ட விசைப்படகுகளை புகைப்படம் எடுத்த மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அதிகாரிகளை கண்டித்து டிச.27 மீன்வளத்துறை அலுவலகத்தை முற்றுகையிடுவது என்றும், அதனை தொடர்ந்து தொடர் வேலைநிறுத்தம் செய்வது என்றும் முடிவெடுத்தனர்.

விசைப்படகு மீனவர் சங்க ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட விசைப்படகு சங்கத்தினரின் பிரச்சினை குறித்து கேட்டறிந்துவிட்டு தஞ்சாவூர் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் மணிகண்டனை தொடர்பு கொண்டு மீனவர் நலவாரிய துணைத்தலைவர் தாஜூதீன் பேசினார்,அப்போது தாஜூதீனை மரியாதை குறைவாக பேசிவிட்டு போன் இணைப்பை துண்டித்துவிட்டார்,இது மீனவர் சமுதாயத்தையே அவமரியாதை செய்த செயலாகும்.இதற்காக தஞ்சாவூர் மீன்வளம் மற்றும் மீன்வர் நலத்துறை இயக்குனர் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என தஞ்சை மாவட்ட விசைப்படகு மீனவர்கள் மற்றும் தொழிலாளர்கள் அரசை கேட்டுக்கொண்டனர்.


Post a Comment

Previous Post Next Post