மல்லிப்பட்டினம் பகுதிகளில் வீடுகளில் கார்த்திகை தீபம் ஏற்றி வழிபாடு.!

 


கார்த்திகை மாத பௌர்ணமி நாளும், கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்த திருக்கார்த்திகை நாளில் இல்லங்களிலும், கோயில்களிலும் தீபங்களை ஏற்றி மகிழ்ச்சியாகக் கொண்டாடப்படுவது தீபத் திருநாளாகும். கார்த்திகை மாதத்தில் வருகின்ற கார்த்திகை நாள் ஏனைய கார்த்திகை நாட்களை விடவும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகின்ற ஒரு நாளாகும். கார்த்திகை தீபத் திருநாளில் மாலை வேளையில் வீடுகளின் வெளிப்புறங்களிலும், வீட்டு முற்றத்திலும் விளக்கேற்றி மக்கள் அனைவரும் கொண்டாடும் நன்னாளாகும். 

இந்நிலையில் தஞ்சை மாவட்டம்,மல்லிப்பட்டினம் ராமர் கோவில் தெரு,சின்னமனை,கேஆர் காலணி,மனோரா உள்ளிட்ட பகுதிகளில் உள்ளவர்கள் தங்களது வீடுகள்,கடைகள் ஆகிய இடங்களில் கார்த்திகை தீபங்களை ஏற்றி வழிப்பட்டனர்.

தீபங்களில் தூபதீபம், புஷ்ப, நாத, புருஷ, மிருக, கஜ, ருயாஜத, வியாக்ர, ஹம்ச, கும்ப, குக்குட, விருஷ, கூர்ம, நட்சத்திர, மேரு, கற்பூர என 16 வகை தீபங்கள் உள்ளன. திருக்கார்த்திகை நாளன்று கோயில்களில் இந்த வகை தீபங்கள் ஏற்றி வழிபாடு நடைபெறும். வீடுகளில் 27 தீபம் ஏற்றி பூ, பழங்கள், அவல்பொரி ஆகியன வைத்து படைப்பது வழக்கம். தீபதிருநாளுக்காக அன்ன வடிவ, பிரபை குத்து விளக்கு, மலபார் விளக்கு, பஞ்சலிங்க தீபம், பாவை, பாலாடை விளக்கு, விநாயகர், லட்சுமி, பாலாஜி  விளக்குகள், சர விளக்குகள், தூண்டாமணி, வாசமாலை அகல் விளக்கு, டெரக்கோட்டா, குபேர விளக்கு, நந்தா, வித்யா தீபம், காமாட்சி, அஷ்டலட்சுமி, 108 அஷ்டோத்ர தீபம், அடுக்கு விளக்குகள் என பலரக தீபவிளக்குகள் தற்போது  விற்பனைக்கு வந்துள்ளது.







Post a Comment

Previous Post Next Post