மலைகளில் சிக்கிக் கொண்ட இரு சுற்றுலா பயணிகள் - பாதுகாப்பாக மீட்டெடுத்த ராஸ் அல் கைமா காவல்துறை!!

 





ராஸ் அல் கைமா காவல்துறையின் விமானப் பிரிவு, தேடல் மற்றும் மீட்புத் துறை இணைந்து, ராஸ் அல் கைமா எமிரேட்டில் 3,000 அடி கொண்ட மலை உச்சியில் தவித்த இரண்டு சுற்றுலா பயணிகளை பாதுகாப்பாக மீட்டனர்.

ராஸ் அல் கைமா மலைகளில் மலை ஏறும் போது இரண்டு ஆசிய நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் சோர்வு அடைந்ததாகவும், பின்பு அவர்களுக்கு உதவி தேவைப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு உடனடியாக ஹெலிகாப்டர் அனுப்பி வைக்கப்பட்டது. மீட்பு குழுவினர் சுற்றுலாப் பயணிகளை கண்டுபிடித்து அவர்களுக்கு தேவையான முதலுதவி அளித்து பாதுகாப்பாக தரைக்கு கொண்டு வந்தனர்.

மேலும், அமீரகத்தில் கரடு முரடான நிலப்பரப்பில் ஏறும்போது மிக எச்சரிக்கையுடன் இருக்கவும், அபாயகரமான பகுதிகள் மற்றும் அதிக உயரத்திற்கு ஏறுவதை பயணிகள் தவிர்க்குமாறு ராஸ் அல் கைமா காவல்துறை அறிவுறுத்தியுள்ளனர்.

Post a Comment

Previous Post Next Post