தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மக்களை நாடி, மக்கள் குறைகளைக் கேட்டு உடனுக்குடன் தீர்வு காண "உங்களைத் தேடி உங்கள் ஊரில் "என்ற திட்டத்தினை அறிவித்தார்.
அதன் ஒரு பகுதியாக தஞ்சை மாவட்டம்,குருவிக்கரம்பையில் முத்துமாரியம்மன் கோயில் வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் மக்கள் நேர்காணல் முகாம் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் நடைபெற்றது.இதில் பொதுமக்களிடம் இணையத்தில் பதிவுசெய்த கோரிக்கை மனுக்களை பெற்றனர்.
இந்நிகழ்வில் பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் அசோக்குமார், சேதுபாவாசத்திரம் ஒன்றிய தலைவர் முத்துமாணிக்கம்,மற்றும் வருவாய்த்துறை, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
Post a Comment