மல்லிப்பட்டினம் ஷாபி இமாம் தெரு சுற்றி சுகாதர சீர்கேடு,கர்ப்பிணிகள்,குழந்தைகளுக்கு நோய் தொற்று பரவும் அபாயம்.!

 



தஞ்சை மாவட்டம் சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சி,மல்லிப்பட்டினம் ஷாபி இமாம் தெருவில் அமைந்துள்ள பழுதடைந்த துணை சுகாதர நிலையம் கட்டிடம் அருகே  அங்கன்வாடி சுற்றி சுகாதார சீர்கேடுகள் ஏற்பட்டு நோய் தொற்று குழந்தைகளுக்கு பரவும் அபாயம் உருவாகி இருக்கிறது.

மல்லிப்பட்டினம் ஷாபி இமாம் தெருவில் அமைந்துள்ள துணை சுகாதர நிலைய கட்டிடம் பழுதடைந்து காணப்படுவதால், அங்கன்வாடியில் பெண்களுக்கு கர்ப்ப கால பதிவேடுகள்,தடுப்பூசிகள்,குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் மாதாந்திர பரிசோதனைகள் ஆகியவை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

செயல்பாட்டில் இல்லாத துணை ஆரம்ப சுகாதர நிலையம் அருகே சுகாதரமின்றி  பிளாஸ்டிக் கழிவுகள்,குப்பைகள் ஆகியவை காரணமாக துர்நாற்றம் வீசுகிறது,மேலும் இந்த இடங்களில் பன்றிகளும் சுற்றி திரிகின்றன,அங்கன்வாடியில் மாதாந்திரம் பரிசோதனைக்கு வரக்கூடியவர்களுக்கும்,எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்க கூடிய குழந்தைகளுக்கு எளிதில் நோய் தொற்று பரவும் அபாயம் இருந்து வருகிறது.

மேலும் குளத்தில் இருந்து கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு,மலேரியா போன்ற பல்வேறு நோய் தொற்று பரவும் அபாய சூழல் இருக்கிறது.

 அங்கன்வாடி அருகே உள்ள பகுதிகளை சுற்றி உடனடியாக சுகாதர பணிகளை மேற்கொள்ள வேண்டும்,புதுக்குளத்தை சுற்றியும் உள்ள குப்பைகளை அகற்றிட வேண்டும் என்பது பொதுமக்கள் மற்றும் கர்ப்பிணிகளின் கோரிக்கையாக இருக்கிறது.

பழுதடைந்த துணை சுகாதார நிலையம் தற்சமயம் செயல்பாட்டில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.






Post a Comment

Previous Post Next Post