சரபேந்திராஜன்பட்டிணம் ஊராட்சியில் குடியிருப்புகளில் சூழ்ந்துள்ள மழைநீர்.!

 


சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சி பகுதிகளில் தொடர் மழை காரணமாக குடியிருப்பு பகுதியில் மழைநீர் சூழ்ந்துள்ளது. 

சரேபந்திரராஜன் பட்டினம் ஊராட்சியில் மல்லிப்பட்டினம்,மருதுபாண்டியர் நகர்,கேஆர் காலணி,காயிதே மில்லத் நகர்,கள்ளிவயல்,ராமர்கோவில் தெரு உள்ளிட்ட ஊராட்சியின் பல பகுதிகளில் மழைநீர் தேங்கி இருக்கிறது.

மழைநீர் வாய்க்கால்கள் சுத்தம்  செய்யாமல் இருப்பதால் மழை நீர் செல்ல வழி இல்லாமல் ஊராட்சியின் பல பகுதிகளில் மழை நீர் சூழ்ந்து காணப்படுகிறது.இதனால் ஏரி,குளம்போல் தண்ணீர் தேங்கி காட்சியளிக்கிறது.

மேலும் மழைநீர் குடியிருப்புகளில் தேங்கியுள்ளதால் அத்தியாவசிய தேவைகளுக்கு கூட வெளியே செல்லமுடியாமல் வீடுகளிலே முடங்கி பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.

இது குறித்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில் :இப்பகுதிகளில் கால்வாய்கள் முறையாக தூர்வரப்படாமல் இருந்ததால் மழை நீர் நிரம்பி கழிவுநீருடன் கலந்து வீட்டுகளுக்குள் மழை நீர் புகுந்துள்ளது.மேலும் மழைநீருடன் கழிவு நீர் கலந்து உள்ளதால் வீடு முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது.வீட்டுக்குள் புகுந்த தண்ணீரை பாத்திரங்களில் எடுத்து தெருவில் ஊற்றி வருகின்றோம் மழை இடைவிடாமல் பெய்யும் நிலையில் சிறிது கூட ஒய்வு எடுக்க முடியாமல் மழை நீரை வெளியேற்றி வருவதாக அப்பகுதியில் வசிக்கும் மக்கள் வேதனையுடன் கூறுகின்றனர்.மழை நீரில் கழிவு நீரும் கலந்து குடியிருப்புகளை சூழ்ந்துள்ளதால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் மேலும் தொடர்ந்து மழை பெய்தால் முழுமையாக மூழ்கி விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது என்று கூறுகின்றனர்

குடியிருப்புகளில் சூழ்ந்துள்ள மழை நீரை வெளியேற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.



















Post a Comment

Previous Post Next Post