மல்லிப்பட்டினத்தில் எஸ்டிபிஐ கட்சி ஆலோசனை கூட்டம்.!



தஞ்சை தெற்கு மாவட்டம் எஸ்டிபிஐ கட்சியின் மல்லிப்பட்டினம் கிராம பஞ்சாயத்து கமிட்டி கூட்டம் சேதுபாவாசத்திரம் ஒன்றிய அலுவலகத்தில்  கிராம பஞ்சாயத்து கமிட்டி தலைவர் ஜவாஹீர் தலைமையில் சிறப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் எஸ்டிபிஐ கட்சியின் சேதுபாவாசத்திரம் ஒன்றிய செயலாளர் நிஜாம் முகைதீன் மற்றும் ஒன்றிய துணைத்தலைவர் முகமது அஸ்கர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துக்கொண்டனர்.

பிப்.2ல் தஞ்சையில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் நடத்தப்பட இருக்கிற வக்ஃப் உரிமை பாதுகாப்பு மாநாடு பணிகளை மேற்கொள்வது குறித்தும், இல்லம் தோறும் எஸ்டிபிஐ தீவிர உறுப்பினர் சேர்க்கை பிரச்சாரம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.இந்நிகழ்வில் கிளை கமிட்டி நிர்வாகிகள் அப்துல்லா,குதா ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

இறுதியாக கிராம பஞ்சாயத்து கமிட்டி செயலாளர் பைசல் ஹாமீம் நன்றியுரையாற்றினார்.

Post a Comment

Previous Post Next Post