தஞ்சை மாவட்ட விசைப்படகுகள் சங்கம் சார்பில் நடத்தப்படும் மல்லிப்பட்டினம் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அலுவலக முற்றுகை போராட்டத்திற்கு மனிதநேய மக்கள் கட்சி முழு ஆதரவினை வழங்குவதாக அறிவித்துள்ளது.
மீனவர்கள் மற்றும் மீனவர் சங்க பிரதிநிதிகளுடன் தொடர்ந்து பிரச்சனை அளிக்கும் தஞ்சை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் மணிகண்டன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மீனவர்களின் வாழ்வாதரத்தை கேள்விக்குள்ளாக்கும் அதிகாரிகளை கண்டித்தும், தமிழ்நாடு அரசின் மீனவர் நலவாரிய துணை தலைவர் தாஜூதீன் அவர்களை அவமரியாதை செய்த உதவி இயக்குனர் மீது துறை ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
நாளை(டிச.27) நடக்க இருக்கும் மல்லிப்பட்டினம் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அலுவலக முற்றுகை போராட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சி ஆதரவளிக்கும் அந்த மீனவர்களுக்கான போராட்டத்தில் பங்கேற்கும் என கட்சியின் மாவட்ட செயலாளர் அப்துல் பகத் அறிவித்துள்ளார்.

Post a Comment