இன்னும் இரண்டு தினங்களில் சாலை மறியல் போராட்டம் அறிவிப்பு தஞ்சை மாவட்ட நாட்டுபடகு சங்கங்கள் அறிவிப்பு.!



தஞ்சை மாவட்டம்,மல்லிப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் மீன்வளத்துறை ஆய்வாளர்களை சந்தித்து காரைக்கால்,நாகப்பட்டினம் விசைபடகு மீனவர்களால் பாதிக்கப்பட்ட நாட்டுபடகு மீனவர்கள் இழப்பீடு பெற்று தர கோரிக்கை வைத்தனர்.

காரைக்கால், நாகை  காரைக்கால் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்ட விசைப்படகுகள் சட்டவிரோதமாக பாக்ஜல சந்தி கடல் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட இரட்டை மடிவலைகளைக் கொண்டு தொடர்ச்சியாக 24 மணி நேரமும் மீன்பிடி தொழில் செய்து ஏழை எளிய நாட்டுப் படகு மீனவர்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்குவதோடு அவர்களுடைய பல லட்சம் மதிப்புள்ள வலைகளை முற்றிலும் சேதப்படுத்தி விடுகிறார்கள் அதனை கண்டித்து இன்று(டிச.23,2024)  தர்ணா போராட்டம் நடக்கவிருந்த நிலையில் தர்ணா போராட்டத்தை கைவிட்டு பாதிக்கப்பட்ட நாட்டுபடகு மீனவர்கள் தங்களுக்கு இழப்பீடு பெற்று தரவேண்டும் என்றும் இது போன்ற சம்பவங்கள் நடைபெறா வண்ணம் அரசு கவனம் செலுத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது.  

மேலும் இரண்டு தினங்களில் சாலை மறியலுக்கான தேதி அறிவிக்கப்பட்ட பின்பு ஐந்து மாவட்ட நாட்டுப்படகு மீனவர்களும், சமூக ஆர்வலர்களும் ,கடல் வளத்தை பாதுகாக்க விரும்பும் பொதுமக்கள் அனைவரும் தவறாது இந்த சாலை மறியல் போராட்டத்தில் கலந்துகொண்டு ஏழை எளிய நாட்டுப் படகு மீனவர்களின் வாழ்வாதாரத்தைபாதுகாத்து தருவதற்கு  ஒன்று கூடுமாறு போரட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர்.



Post a Comment

Previous Post Next Post