பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி எஸ்டிபிஐ கட்சி சார்பில் தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு.!



தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (டிச.23) திங்கட்கிழமை காலையில்நடந்த மக்கள் குறை தீர்க்கும் முகாமில் கலந்து கொண்டு SDPI கட்சி சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு வழங்கினர். 

சேதுபாவாசத்திரம் ஒன்றியத்திற்குட்பட்ட சரபேந்திரராஜன் பட்டினம் ஊராட்சி மல்லிப்பட்டினம் கடைத்தெருவில் நெடுங்காலமாக பேருந்து நிறுத்த கட்டிடம் இல்லாததை முன்னிட்டு பேருந்து கட்டடம் அமைக்க கோரியும், மல்லிப்பட்டினம் காசிம் அப்பா தெரு மற்றும் காயிதே மில்லத் நகர் வாசிகளுக்கு பேருந்து நிறுத்த நிழற்குடை அமைக்க கோரியும் மனு கொடுக்கப்பட்டது.

இன்னும் பள்ளி மாணவிகளும் பெண் பயணிகளும் பயன்படுத்தும் பேருந்து நிறுத்த சாலை 25 வருடங்களுக்கு முன்னால் போடப்பட்ட சிமென்ட் சாலையானது சிதிலமடைந்து சாக்கடை நிறைந்து காணப்படுவதைக் கண்டு ஊராட்சி நிர்வாகத்திற்கு இரண்டு முறையும் மற்றும் மாவட்ட ஆட்சி தலைவர் தலைமையில் குருவிக்கரம்பையில் நடந்த மக்கள் நேர்காணல் முகாமிலும் மனுக்கள் அளிக்கப்பட்டது. நடவடிக்கை ஏதும் அரசு எடுக்காத காரணத்தினால் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோப்புகளுடன் மீண்டும் மனு அளிக்கபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.





Post a Comment

Previous Post Next Post