முன்னாள் இந்திய பிரதமர் டாக்டர். மன்மோகன் சிங் அவர்களின் மறைவையொட்டி பேராவூரணியில் புதிய பேருந்து நிலையத்திலிருந்து அண்ணா சிலை வரை அமைதி ஊர்வலம் நடைபெற்றது.
பிறகு அண்ணா சிலை அருகில் இரங்கல் கூட்டமும் நடைபெற்றது. இதில் முன்னாள் பேராவூரணி தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் என்.அசோக்குமார் எம்.எல்.ஏ அவர்களும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர். சிங்காரம் அவர்களும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொதுச் செயலாளர் பட்டுக்கோட்டைக்கு கே. மகேந்திரன் அவர்களும், தமிழ்நாடு காங்கிரஸ் சிறுபான்மை துறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் மல்லிப்பட்டினம் நாகூர் கனி அவர்களும்,தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தஞ்சை தெற்கு மாவட்ட பொதுச்செயலாளர் மல்லிப்பட்டினம் கமால் பாட்ஷா அவர்களும், காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்ட் மற்றும் அனைத்து கட்சியின் நிர்வாகிகளும், உறுப்பினர்களும் பெருந்திறலாக ஊர்வலத்திலும் இரங்கல் கூட்டத்திலும் பங்கேற்று அஞ்சலி செலுத்தினார்கள்.
Post a Comment