சாட்டையை தனக்கே சுழற்றியே அண்ணாமலை - என்ன நடந்தது ?

தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை 27/12/2924 அன்று கோவையில் உள்ள தனது இல்லத்தின் முன்பு தன்னைத் தானே சாட்டையால் அடித்துக் கொண்டு போராட்டம் நடத்தியது தமிழ்நாடு அரசியலில் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. 



சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில், குற்றம் சாட்டப்பட்டு கைதான நபர் தி.மு.க.வைச் சேர்ந்தவர் எனவும், தி.மு.க அவரை காப்பாற்ற நினைப்பதாகவும், தி.மு.க ஆட்சியில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்ந்து அதிகரிப்பதாகவும் குற்றம் சாட்டிய அண்ணாமலை அவற்றை கண்டித்து தன்னைதானே சாட்டையால் அடித்துக் கொண்டு போராட்டம் நடத்தியது தமிழ்நாடு அரசியலில் ஒரு வித விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது. 

தமிழ்நாடு அரசியல் கட்சித் தலைவர்கள் சிலர் இந்த போராட்டத்தை ஆதரித்தும், பலர் இதைத் தொடர்ந்து விமர்சித்தும் வருகின்றனர்.

Post a Comment

Previous Post Next Post