தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டிணம் ஜும்மா பள்ளி அருகில் எஸ்டிபிஐ கட்சியின் சேதுபாவாசத்திரம் சத்திரம் ஒன்றியம் சார்பில் டிசம்பர் 6 பாபர் மசூதி தகர்ப்பு 32 ஆண்டுகால அநீதி என்ற கண்டன முழக்கத்தில் ஈடுபட்டனர்.
மல்லிப்பட்டினம் கிராம பஞ்சாயத்து கமிட்டி தலைவர் ஜவாஹீர் வரவேற்புரை நிகழ்த்தினார்.சேதுபாவாசத்திரம் ஒன்றிய தலைவர் ரியாஸ் அகமது,ஒன்றிய செயலாளர் நிஜாம் முகைதீன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.இதில் ஜமாஅத் தலைவர் அல்லாபிச்சை,செயலாளர் அப்துர் ரஹீம்,சகாப்தீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஹாமீம் பைசல் கண்டன கோஷங்களை எழுப்பினார்.
இறுதியாக சேதுபாவாசத்திரம் ஒன்றிய துணைத்தலைவர் முகமது அஸ்கர் நன்றியுரை ஆற்றினார்.இந்நிகழ்வில் 50க்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டனர்.
Post a Comment