உலகின் தலைசிறந்த பொருளாதார மேதையும், முன்னாள் பிரதமருமான டாக்டர் மன்மோகன்சிங் அவர்கள் மறைவையொட்டி சென்னை சத்தியமூர்த்தி பவன் அரங்கத்தில் அனைத்து கட்சித் தலைவர்கள் புகழஞ்சலி கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் திராவிட முன்னேற்ற கழக அமைப்புச் செயலாளர் திரு. ஆர்.எஸ். பாரதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் திரு. கே. பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் திரு. இரா. முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி துணைப் பொதுச் செயலாளர் திரு S S பாலாஜி எம்.எல்.ஏ., இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன்,
தமிழக முஸ்லீம் முன்னேற்ற கழகத்தின் சார்பாக திரு. அப்துல் சமது, எம்.எல்.ஏ., மக்கள் நீதி மய்யத்தின் செய்தித் தொடர்பாளர் திரு. முரளி அப்பாஸ் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர், தமிழ்நாடு சிறுபான்மை ஆணைய முன்னாள் தலைவர் திரு. சா. பீட்டர் அல்போன்ஸ் ஆகியோர் பங்கேற்று புகழஞ்சலி செலுத்தினர்.
இந்நிகழ்வில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர்கள், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்கள், முன்னாள் மத்திய அமைச்சர்கள், இன்னாள் - முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர்கள், மாநில காங்கிரஸ் நிர்வாகிகள், மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள், அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினர்கள், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள், சென்னை பெருநகர மாமன்ற உறுப்பினர்கள், முன்னணி அமைப்புகள், துறைகள் மற்றும் பிரிவுகளின் தலைவர்கள் அதன் நிர்வாகிகள், மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் உள்ளிட்ட அனைத்து நிலை நிர்வாகிகளும் கலந்து கொண்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
Post a Comment