தஞ்சை மாவட்டம் சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சியில் மல்லிப்பட்டினம் பகுதிகளில் பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் அசோக் குமார் ஆய்வுகளை மேற்கொண்டார்.
மல்லிப்பட்டினம் பகுதிகளில் காயிதே மில்லத் நகர் மற்றும் பெண்கள் பேருந்து நிலையம் பின்புறம் உள்ள வீரர் முகமது அலி தெரு ஆகிய இடங்களில் ஆய்வுகளை செய்து தாற்காலிக நடவடிக்கை ஏற்பாடு செய்து தருவதாகவும் கூறினார்.
மேலும் பொதுமக்கள் நடந்து செல்வதற்கு நிரந்தரமாக ஃபேளேவர் பிளாக் சாலையோ அல்லது ஏற்படுத்தி தருவதாக அப்பகுதி மக்களிடம் உறுதியளித்தார்.மேலும் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு உயர் மின்விளக்கு மற்றும் சிசிடிவி கேமரா ஆகியவை பொறுத்திய அசாருதீனுக்கு வாழ்த்துகளையும்,பாராட்டுக்களையும் தெரிவித்தார்.
இதில் தலைமை பொதுக்குழு உறுப்பினர் அப்துல் மஜீத்,மீனவர் நலவாரிய துணைதலைவர் தாஜூதீன்,முகமது அலி,சமூக ஆர்வலர்கள் ரஹ்மத் நிஷா,தனபால்,அசாருதீன்,காங்கிரஸ் பிரமுகர் கமால் பாட்சா,எஸ்டிபிஐ கட்சி நிஜாம் முகைதீன்,ஜமாத் நிர்வாகி சகாப்தீன் ஆகியோர் உடனிருந்தனர்.










Post a Comment