எஸ்டிபிஐ கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட செயற்குழு டிச-24 செவ்வாய் கிழமை மாலை 7 மணியளவில் அதிரை நகர கட்சி அலுவலகத்தில் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் முஹம்மது ரஹீஸ் தலைமையில் நடந்தது.
பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதித் தலைவர் அஹமது அஸ்லம் வரவேற்புரை ஆற்றினார்.
சிறப்பு அழைப்பாளராக கட்சியின் மாநில பொது செயலாளர் அபுபக்கர் சித்திக் கலந்துக்கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார். அதனைத் தொடர்ந்து கட்சி வளர்ச்சி இல்லம் தோறும் எஸ்டிபிஐ திட்டப்பணிகள் குறித்தும், எதிர்வரும் பிப்-02 தஞ்சையில் நடக்க இருக்கும் மாபெரும் வக்ஃபு உரிமை மீட்பு மாநாடு குறித்தும் விவாதிக்கப்பட்டது. மேலும் மாநில பொது செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அபுபக்கர் சித்திக் மாவட்ட தலைவர் முகமது ரஹீஸ் சால்வை போர்த்தி கௌரவித்தார்.
இக்கூட்டத்திற்கு பட்டுக்கோட்டை தொகுதி செயலாளர் தீன் முஹம்மது மற்றும் சேதுபாவாசத்திரம் ஒன்றிய செயலாளர் நிஜாமுதீன் முன்னிலை வகித்தனர். இதில் அதிரை நகர, கிளை தலைவர் செயலாளர், மதுக்கூர் நகர, கிளை தலைவர் மற்றும் செயலாளர், மல்லிப்பட்டினம் கமிட்டி, கிளை தலைவர் மற்றும் செயலாளர், சேதுபாவாசத்திரம் கிளை செயலாளர் மற்றும் சம்பை கிளை தலைவர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இறுதியில் சேதுபாவாசத்திரம் ஒன்றியத் தலைவர் ரியாஸ் அஹமது நன்றி கூறினார்.



Post a Comment