சேதுபாவாசத்திரத்தில் இருந்து புயல் பாதிப்பு பகுதிகளுக்கு நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு.!

 


புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டத்திற்கு தஞ்சை மாவட்டம்,சேதுபாவாசத்திரம் ஒன்றியம் சார்பில் நிவாரண பொருட்கள் சேகரித்து அனுப்பி வைக்கப்பட்டது.

தமிழ்நாடு முதலமைச்சர் வேண்டுகோளின்படி புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசி,பருப்பு,எண்ணெய்,மளிகை பொருட்கள் அடங்கிய சுமார் 1.50லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சரக்கு வேன் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினர் அசோக்குமார்,சேதுபாவாசத்திரம் ஒன்றிய குழு தலைவர் முத்துமாணிக்கம்,வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நாகேந்திரன்,சடையப்பன்,துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,அலுவலக பணியாளர்கள்,ஒன்றிய குழு உறுப்பினர்கள்,ஊராட்சி மன்ற தலைவர்கள்,ஒப்பந்தகாரர்கள் கலந்துக்கொண்டனர்.

Post a Comment

Previous Post Next Post