பாபர் மசூதி இடிக்கப்பட்ட டிசம்பர் 6 பயங்கரவாத எதிர்ப்பு நாளில் இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மத வழிபாட்டு தளங்களை பாதுகாத்திட கோரியும்,ஏராளமான பள்ளிவாசல்களையும் அதன் சொத்துக்களையும் பலவந்தமாக பறிக்கும் வகையில் ஒன்றிய பாஜக அரசு கொண்டுவர துடிக்கும் வக்பு திருத்தச் சட்டத்தை திரும்ப பெற கோரியும்,
௨.பி உள்ளிட்ட பாஜக ஆளும் மாநிலங்களில் புல்டோசர் கலாச்சாரத்தால் இடித்து தள்ளப்பட்ட பள்ளிவாசல்கள் மற்றும் பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்களின் வீடுகளையும் மீண்டும் கட்டித்தர கோரியும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் தஞ்சை மண்டலம் சார்பில் திருவாரூர் நகரத்தில் பெருந்திரள் மக்கள் போராட்டம் நடைபெற்றது.
இதில் தமுமுக மாநில பொதுச்செயலாளரும்,மணப்பாறை சட்டமன்ற உறுப்பினருமான அப்துல் சமது, ஊடகவியலாளர் தமிழ்க் கேள்வி செந்தில் வேல் தமுமுக மாநில செயலாளர் தைக்கால் முபாரக் திருவாரூர் மாவட்ட தலைவர் முஜிபுர் ரகுமான் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.
மேலும் இந்நிகழ்வில் தமுமுக மல்லிப்பட்டினம் கிளை நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்துக்கொண்டனர்.
Post a Comment