உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி,டெல்டாவில் பரவலாக மழை வாய்ப்பு.

 


தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்று சுழற்சி படி படியாக மேற்காக நகர்ந்து காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்துள்ளது. இது மேலும் படி படியாக சற்று வலுவடைந்து மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு வங்கக்கடல் இலங்கை, தமிழகம் ஒட்டி நகரக்கூடும்.

இதனால் வரும் 10 ஆம் தேதி இரவு முதல் தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய வட கடலோர மாவட்டங்களில் மழை பதிவாக துவங்கி படி படியாக அதிகரிக்கலாம்.

11, 12, 13, 14 தேதிகளில் டெல்டா மாவட்டங்கள் மற்றும் வட கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை பதிவாகலாம்.

நிகழ்வின் நகர்வின் அடிப்படையில் தென் மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் மழை அமையலாம்.

Post a Comment

Previous Post Next Post