சரபேந்திரராஜன்பட்டிணம் மழைநீர் சூழ்ந்தற்கான முக்கிய காரணம் வடிகால்கள் தூர்வாரப்படாமல் விட்டதே என்று சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு.
தஞ்சை மாவட்டம் சரபேந்திரராஜன் பட்டினம் ஊராட்சியில் அனைத்து பகுதிகளிலும் வெள்ளம் போல் குடியிருப்புகளில் மழைநீர் சூழ்ந்து காணப்படுகிறது. முன்னெச்சரிக்கையாக மழைக்காலங்களில் மழை நீர் வடிகால்கள் சுத்தப்படுத்தி மழைநீர்கள் செல்வதற்கான வழிகளை உள்ளாட்சி பிரதிநிதிகள் செய்திட வேண்டும் என மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டும் அதனை அலட்சியப்படுத்தியதன் விளைவே மழை நீர் சூழ்ந்ததற்கான முக்கிய காரணம் என சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.வாய்க்கால்களே தெரியாமல் காட்சியளிக்கிறது.
மேலும் மழைநீர் வாய்க்கால்கள் சுருங்கி,குப்பைகள் வாய்க்கால்களிலே கொட்டுவதாலும் மழைநீர் செல்லமுடியாமல் அங்கேயே தேங்கி நிற்பதால் குடியிருப்புகளுக்குள் மழை நீர் தேங்கி நிற்கிறது.ஆகவே உடனடியாக மழைநீர் வாய்க்கால்களை கிழக்கு கடற்கரை சாலை மற்றும் இரண்டாம்புளிக்காடு சாலையில் அமைந்துள்ள காயிதே மில்லத்நகர் பகுதியில் இருந்து வாய்க்கால்களை சுத்தப்படுத்தி ஆழப்படுத்த வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக இருக்கிறது.
Post a Comment