மல்லி நியூஸ் செய்தி எதிரொலி, ஒருபுறம் ஊராட்சி,மறுபுறம் சட்டமன்ற உறுப்பினர் மழைநீரை வெளியேற்றும் முனைப்பில் மும்முரம்.!

 



தஞ்சை மாவட்டம்,மல்லிப்பட்டினத்தில் மல்லி நியூஸ் செய்தி எதிரொலியாக மழைநீர் வாய்க்கால்களை தூர் வாரும் பணியை ஊராட்சி நிர்வாகமும்,பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் உத்தரவின் பேரில் இருவேறு இடங்களில் மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த நான்கு நாட்களாக மல்லிப்பட்டினம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.இதனால் குடியிருப்புகளில் மழை தேங்கி பொதுமக்கள் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

இந்நிலையில் காலையில் மல்லிநியூஸ் செய்தி வெளியிட்டு இருந்தது வாய்க்கால்களை தூர் வாரிடவேண்டும் என்றும் மேலும் சமூக ஆர்வலர் கருதா அசார் கோரிக்கையின் பேரிலும் சட்டமன்ற உறுப்பினர் அசோக்குமார் உத்தரவின் பேரில் கிழக்கு கடற்கரை சாலையின் ஒரு புறத்திலும்,சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சி சார்பில் ஐஓபி அருகிலும் வடிகால்களை தூர் வாரும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதில்  மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வீரமுத்து,ஊராட்சி மன்ற துணைத்தலைவர் மாசிலாமணி, தட்சிணாமூர்த்தி ஆகியோர் மேற்பார்வையில் நடைபெற்றது.

செய்தி லிங்








Post a Comment

Previous Post Next Post