நாம் எதிர்பார்த்தது போல மன்னார் வளைகுடா கடல் பகுதியை எட்டியது குறைந்த காற்றழுத்தம். தமிழகத்தில் பரவலாக மழை பதிவாகி வருகிறது,பதிவாகும்.
இந்த நிகழ்வு படி படியாக தென்மேற்கு திசையில் நகர்ந்து அரபிக்கடல் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் இன்று தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக மழை பதிவாகும்.
கடலூர் முதல் ராமநாதபுரம், தூத்துக்குடி வரையுள்ள கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் பரவலாக மழைக்கும் ஆங்காங்கே பல பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழைக்கும் ஒரிரு பகுதிகளில் அதிகனமழைக்கும் வாய்ப்பு உள்ளது. குறிப்பாக நாகை, திருவாரூர், தஞ்சை, புதுகோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் அதிகனமழைக்கும் வாய்ப்பு உள்ளது.
மேலும் கடலூர், மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, விருதுநகர், தென்காசி, மதுரை, திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் பரவலாக மழைக்கும் ஆங்காங்கே கனமழை முதல் மிக கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது.
மேலும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி, நெல்லை, குமரி ஆகிய மாவட்டங்களில் பரவலாக மழைக்கும் ஆங்காங்கே கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது.
மேலும் வேலூர், ராணிப்பேட், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய மாவட்டங்களிலும் பரவலாக மழைக்கும் ஒரு சில பகுதிகளில் கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது.
நீலகிரி முதல் நெல்லை, குமரி வரையான மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் மிக கனமழை முதல் அதி கனமழை வாய்ப்பு உள்ளதால் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதால் அங்குள்ள நீர்வீழ்ச்சிகள், நீர்நிலைகள் அருகே செல்வதைத் தவிருங்கள்.
Post a Comment